தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக அலர்ட் என்.ஜி.ஓ அமைப்பு, கோவை மாவட்ட நிர்வாகம், நகர காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை காந்திபுரம் சிக்னலில் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இதில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாகப் பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட் மற்றும் ‘நல்ல சாலைப் பயனர்’ அட்டைகள் வழங்கப்பட்டது. சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு எச்சரிக்கை அட்டைகள் வழங்கப்பட்டன.

