கோவை, மருதமலை சாலையில், வெட் மிக்ஸ் கலவை கொண்டு தற்காலிகமாக நடைபெற்றுவரும் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வடவள்ளி மருதமலை சாலையில், பாதாள சாக்கடைத்திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவுபெற்ற பகுதிகளில், மாநகராட்சி சார்பில், தற்போது சுமார் 1.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெட் மிக்ஸ் கலவை கொண்டு தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை இன்று மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாநகராட்சி சார்பில், மீதமுள்ள சுமார் 2.6 கிலோ மீட்டர் தொலைவிற்கான, சாலைப் பணிகளில், தற்காலிகமாக வெட் மிக்ஸ் கலவை கொண்டு சாலை சீரமைக்கப்பட உள்ளது.