கோவை மாநகர காவல் துறை மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (Drugs Free Tamilnadu) எனும் தலைப்பில் மாபெரும் உறுதிமொழி எடுப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இதனை காவல்துறை துணை ஆணையர்(தெற்கு) சரவணகுமார், உதவி ஆணையர் கரிகால் பாரிசங்கர், ரத்தினம் கல்விக்குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் செயலாளர் மாணிக்கம், ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.rcas 2

இந்தப் பேரணியில் சுமார் 700 மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர், பேரணியின் போது மாணவ மாணவிகள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்களை உரக்க சத்தமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கல்லூரி மாணவ மாணவிகள் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகளையும் அதன் விளைவுகளையும் புரிந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள ஞானசேகர், சரவணகுமார், சித்ரா மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.