ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘ஐந்திணை’ என்ற பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜமாப்புடன் பொங்கல் தொடங்கியது.

RCAS 4 scaled

வள்ளி கும்மி, மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடந்தன. கோலப்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல் மற்றும், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியப் போட்டிகளும் விளையாட்டுகள் நடைபெற்றன. கலாச்சார நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைக் கண்காட்சிகள் போன்றவை இடம்பெற்றன.

RCAS 5

மேலும், பொங்கல் கருப்பொருள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்வில் மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

RCAS 3 1