ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் பி. பார்ம் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீராம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்துகொண்டார். கல்லூரியின் துணை முதல்வர் கோபால் ராவ், உதவிப் பேராசிரியர் சாம் ஜான்சன் உதய சந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
