சென்னை, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், 23-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினராக நியூயார்க் ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்விச்சார்ந்த செயல்பாடுகள் தலைமை பேராசிரியர், துணைத் தலைவர் டாக்டர் பிரபு டேவிட்,
மற்றும் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் 1601 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இதில் 1434 பேருக்கு இளங்கலை பட்டமும், 149 பேருக்கு முதுகலை பட்டமும், 18 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. 20 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றனர்.
ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன், துணைத் தலைவர் அபய் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.