பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில், விளையாட்டு விழா ஜி.ஆர்.டி கலையரங்கில் இன்று (25-03-2025)நடைபெற்றது.ஆசிய விளையாட்டு தங்கப்பதக்க வெற்றியாளரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூத்த விளையாட்டு வீரருமான மனதி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கடந்த ஆண்டில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பி.எஸ்.ஜி. கலை கல்லூரி மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியதோடு, சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில், கல்லூரியின் செயலாளர் கண்ணையன், துணை முதல்வர் ஜெயந்தி, உடற்கல்வி இயக்குனர் நவநீதன், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.