கோவை பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் கவுரவ விருந்தினராகவும், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு பழைய நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னாள் மாணவர் பேரவையின் செயலாளர்கள் நாராயணசாமி, தாரணி, முன்னாள் தலைமையாசிரியர் அறவாழி அ. இராமசாமி, ஓய்வுபெற்ற முதுகலைத் தமிழாசிரியர்கள் புலவர் வெ. சுப்பிரமணியன், புலவர் செந்தலை ந. கவுதமன், பள்ளிக்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
