பி.எஸ்.ஜி. அறநிலையத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக நல மருத்துவத் துறை சார்பில், நீலகிரி பகுதியில் தொடர்ச்சியான சுகாதார பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஊட்டியில் இருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கின்னகொரை கிராமத்தில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாமை பி.எஸ்.ஜி. மருத்துவ குழுவினர் திங்கட்கிழமை (21.4.2025) நடத்தினர். அப்பகுதி மக்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள், மருத்துவர் ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் நல வாழ்வு சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும், இந்த முகாம் குரு சித்தகிரி விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் மற்றும் நீலகிரி சுவாமி விவேகானந்தா அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.