கோவையில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை முதல் துவங்கியது. ஆகஸ்ட் 30 வரை போட்டிகள் நடைபெறுகின்றது.
60-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.

ஆண்கள் பிரிவு முதல் போட்டியில் திருவனந்தபுரம் – கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து சென்னை – ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்சார வாரிய அணி 74 / 41 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது
இரண்டாவது போட்டியில் லோனாவாலா – இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து சென்னை – ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணி 76 / 63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில் புது டெல்லி – இந்திய விமானப்படை அணியை எதிர்த்து புது டெல்லி – ஓஎன்ஜிசி அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 81 / 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
