ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கான புதுமைச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வு காண புதுமை, ஆய்வு மனப்பான்மை, சிந்தனை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் சித்ரா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேக்கத்தான், வினாடி-வினா, புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த சிந்தனைகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மேலும், தொழில்துறை சார்ந்த சிறப்புரைகள், செய்முறை அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கம் நடத்தப்பட்டன.

6. a 1 scaled

நிகழ்ச்சியில் 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர். ஹேக்கத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.