சிறுதானியங்களில் இருந்து சுவையான, சத்தான மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து இரண்டு நாள் பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி நடைபெறுகிறது.
கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களை பயன்படுத்தி மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பாரம்பரிய உணவுகள் தயாரித்தல், பிழிதல் தொழில்நுட்பம், அடுமனைப் பொருட்கள் தயாரித்தல், உடனடி உணவுப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை இடம்பெறுகின்றன.
பயிற்சிக் கட்டணம் ரூ.1,770. கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளில் செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புக்கு: 94885 18268
