கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்துகொண்டு முகாமினைத் துவக்கி வைத்து, பணிநியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். கோயம்புத்தூர் மகளிர் திட்டம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மதுரா சிறப்புரையாற்றினார்.
8 ஆம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், ஓட்டுநர்கள், கணினி இயக்குபவர்கள், ஆசிரியர்கள், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் போன்ற பல கல்வித் தகுதியுடைய மனுதாரர்கள், பல்வேறு விதமான காலிப்பணியிடங்களுக்கு 858 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ரத்தினம் குழும நிறுவனங்கள் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதன்மைத் தொழில் அலுவலர் நாகராஜ், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
