ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் குறித்த விழிப்புணர்வு ரீல்ஸ் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர்  டாக்டர்  அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

4 18

குறைமாதக் குழந்தையை வீடு கொண்டு செல்வது பல பெற்றோருக்கு பயமும், தயக்கமும் நிறைந்த தருணமாக இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, புதிய டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு முழுநேர வழிகாட்டுதல் வழங்கும்.

இத்தளம், குறைமாதக் குழந்தைகளை பராமரிக்க தேவையான முக்கிய தகவல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், படிப்படியாக விளக்கும் வழிகாட்டி வீடியோ தொகுப்புகளை வழங்குகிறது.

2 26

நிகழ்வில் பச்சிளங்குழந்தைகள் துறையின் தலைவர் மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான டாக்டர் சித்தார்த புத்தவரப்பு, பச்சிளங்குழந்தைகள் ஆலோசகர் டாக்டர் சுஜா மரியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.