டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் கோவை வருகை புரிய உள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாத கார்களை காவல் துறையினர் அகற்றினர்.

கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள கோவைக்கு நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகர் முழுவதும் போடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் கார்களை பார்க்கிங் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஏற்கனவே நிறுத்திவிட்டு சென்ற உரிமையாளர்கள் கார்களை எடுக்காததால் அவற்றினை காவல் துறையினரே கிரேன் வாகனங்களை வைத்து அப்புறப்படுத்தி தனியார் பார்க்கிங் கொண்டு செல்கின்றனர்.

இதை தொடர்ந்து உள்ளே வரும் கார்களை விமான நிலையத்தில் நிறுத்தவும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.