கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை மாநில நெடுஞ்சாலை துறை, மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

தற்போது இரண்டு வழிச்சாலையாக உள்ள வட்ட வடிவப் பாலம் மூன்று வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது. ஐந்து ரேம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வட்டப்பாதையில், குறிப்பாக குட் ஷெட் நோக்கி அமைந்துள்ள ஏறு, இறங்கு தளங்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் வாகனங்கள் ரேம்புக்கு எளிதாக திருப்பமுடியும்.

இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. அகலப்படுத்தும் பணிக்கு ரூ.13 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் சில வாரங்களில் கிடைக்கும் என்றும், அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.