செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), சைபர் பாதுகாப்பு மற்றும் அதிநவீன கணினி துறைகளுக்கான ‘சென்டர் ஆப் எக்சலன்ஸ்’ எனப்படும் திறன்மிகு மையம் ஒன்றை கூட்டாக அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் இந்த துறைகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது 10,000 சதுரடி+ நிலப்பரப்பில் அமைக்கப்படும். குறைந்தது ரூ.75 கோடியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த திறன்மிகு மையத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் மட்டும் ரூ.30 கோடி நிதியாக வழங்கப்படும் எனவும் மீதம் உள்ள நிதி இந்த திட்டத்தில் பங்குதாரர்களாக இணையும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முதலீடு மூலம் இந்த மையத்தில் ஏ.ஐ. திறனுக்காக தளங்கள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, அதிக திறன் கொண்ட சர்வர்கள், சோதனை சாதனங்கள் என பலவும் வழங்கப்படும். ரூ.75 கோடி நிதி இம்மையத்தின் கட்டமைப்பை உருவாக்க செலவிடப்படும் (நிலம் மற்றும் வளாகம் உருவாக்குவதற்கு ஆகும் செலவு தனி).

மிக விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு – தனியார் நிறுவனம் சார்பில் செய்துகொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.