பேரூர், பட்டீஸ்வரர் கோவிலின் 14 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த விழாவிற்கு முன்னதாக கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலை துறையின் உதவி ஆணையர்கள் கலச எடைகள் சரிபார்ப்பை மேற்கொண்டனர்.
கலசங்களின் தங்க முலாம் பூசல் மற்றும் எடைகள் தகுந்த முறையில் சரிபார்க்கப்பட்டது. கோவை மாவட்ட இந்து சமய அறநிலை துறை (நகை சரிபார்ப்பு) உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் பட்டீஸ்வர் கோவில் உதவி ஆணையர் விமலா ஆகியோர் முன்னிலையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பட்டீஸ்வரர் கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு, கோயில் நிர்வாகம் கும்பாபிஷேகத்தை மிகச் சரியான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.