பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு, காந்திபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் ஓரணியில் தமிழ்நாடு – “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்ற உறுதி மொழியினை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் வாசித்து உறுதி மொழி ஏற்றனர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், திமுக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், பொருளாளர் முருகன், மேயர் ரங்கநாயகி, திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
