தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கபட்டு திறக்கபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பிக்கபட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியை, நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
