திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ‘வனத்துக்குள் திருப்பூர்’ எனும் அமைப்பு சார்பில் நடப்பட்ட மரங்கள் பெருமளவில் வறண்டுபோன நிலையில் உள்ளன.

இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சூழலில் இவை மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு முன்னர் தண்ணீர் பாய்ச்சி, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
