ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை முன்னிட்டு மாணவ மாணவிகள் பூக்கோலம் இட்டு நடனமாடி கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில், ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்கள் சார்பில் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூ.1.25 லட்சத்தை கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர்.