தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான நிமிர்ந்து நில் ஹேக்கத்தான் 2026 போட்டியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பிற்கான நுண்ணறிவுள்ள முன்கணிப்பு இன்குபேட்டர்” என்ற திட்டத்திற்காக முதல் பரிசாக ஒரு லட்சம் வென்றுள்ளனர்.
இதுகுறித்து வழிகாட்டுநர் ரம்யா கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மருத்துவப் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், “ஸ்மார்ட் லிட்டர் கார்ட்” என்ற திட்டத்திற்காக முதல் பரிசாக ஒரு லட்சம் வென்றுள்ளனர். இது குறித்து பேராசிரியர் வினோத் குமார் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், இத்திட்டம் புதுமையான தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
சேலம், இந்துஸ்தான் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள், “மலைப்பகுதி மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள விவசாயத்திற்கான திறன்மிகு நீர்ப்பாசனம்” என்ற திட்டத்திற்காக முதல் 80 அணிகளில் ஒன்றாக தேர்வாகியுள்ளனர். இதுகுறித்து வழிகாட்டுநர் ராஜசேகர் கூறுகையில், மலைப்பகுதிகள் மற்றும் நீர்ப்பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
மாணவர்களின் இந்த சாதனையை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
