கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (2025 – 2029) 4 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தலைவராக மீண்டும் மூன்றாவது முறையாக செல்வராஜ், செயலாளராக பாலாஜி இரண்டாவது முறையாகவும், பொருளாளராக ஜெயசித்ரா புதியதாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணைத்தலைவர்களாக பழனிசாமி, அசோக்,  ஆனந்த்,  நவரத்தினகுமார் பாப்னா மற்றும் சித்தார்த் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக ராமகிருஷ்ணன், சாஜுதீன், திபாலா மற்றும் வித்யப்பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது : கடந்த வருடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியுடன் இணைந்து, சுமார் 1.5 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திலான செமி உள்விளையாட்டு அரங்கத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம். இதில், நவீன முறையிலான 54 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்திலிருந்து பல்வேறு பிரிவுகளில் 11 வீரர்கள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்றுள்ளனர். 56 விளையாட்டு வீரர்கள் தமிழக அணியின் சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு மூலம் அரசு வேலை பெற்றுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 38 மாவட்டங்களில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் 8 முறை நமது வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர் எனக் கூறினர்.