நேரு தொழில்நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ மற்றும் பி.டெக் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக டாட்டா கன்சல்டன்சி டெலிவரி ஹெட் செல்வகுமார் பாலசுப்ரமணி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில்,‘ மாணவர்கள் நேரத்தை பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும்.வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது நீங்களும் சாதிக்கலாம்’ என்றார்.
நிகழ்ச்சிக்கு நேரு குழும நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமையேற்று பேசுகையில்,‘மாணவர்களின் இந்த நான்கு ஆண்டு வாழ்க்கைக்கு நான் முழு பொருப்பேர்க்கிறேன் என்றும். மாணவர்களின் நலனில் எவ்வித குறைபாடும் இருக்காது’ என உறுதிஅளித்தார்.
நேரு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஹச்.என். நாகராஜா பேசுகையில்,ֹ‘கல்விக்கு முதன்மையாக விளங்குவது ஓழுக்கம் அதை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.