பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் பயின்று வெளியேறும் என்.சி.சி கேடட்களுக்கான பிரியாவிடை விழா இன்று ஐ.எம்.எஸ்.ஆர் அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய இராணுவத்தின் என்.சி.சி கமாண்டிங் ஆபிசர் மேஜர் அசோக் குமார் மற்றும் கோவை, ரெட் ஃபீல்ட்ஸ், விமானப்படை மருத்துவமனை குரூப் கேப்டன் கமாண்டிங் அதிகாரி ராகேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, விருந்தினர்கள் இந்திய பாதுகாப்பில் மருத்துவ பணியாளர்களின் முக்கியத்துவம் பற்றிய நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டனர்.