சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூலகத் துறை சார்பில், தேசிய நூலகர் தின விழா மற்றும் பொது அறிவு வினாடி வினா போட்டி பரிசளிப்பு நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாந்தாமணி, மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு பொது அறிவு, அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பொது அறிவு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரி நூலகர் மெல்வின் ஜெபராஜ், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
