கோவை, பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தகவல் தொடர்பியல் (Viscom) துறை சார்பில் விசாரணை, யாத்திசை மற்றும் தங்கலான் திரைப்படத்தின் கதையாசிரியரும், நடிகருமான ஆட்டோ சந்திரனுடன் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (10.9.2024) நடைபெற்றது. நிகழ்வில் தங்கலான் திரைப்படத்தில் பணியாற்றியது குறித்தும், அவரது வாழ்க்கை பயணம் குறித்தும் மாணவர்களிடம் உரையாற்றினார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். இதில் துறைத்தலைவர் (பொறுப்பு) சிட்டி பாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.