கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலச்சினையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிமுகம் செய்தார்.

2 14

நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர்  மலர்விழி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

‘நான் உயிர் காவலன்’ என்ற பிரச்சாரம், கோவை முழுவதும் மக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் 10 லட்சம் பேர் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்று, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, உயிர்களைக் காப்போம் என உறுதியளிக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது.

4 7 scaled

 

அக்டோபர் முதல் வாரத்தில் கோவையில் விபத்தில்லா வாரம் ஒன்றை உருவாக்கும் லட்சியத்துடன், அனைத்து வயதினரிடமும் இதைக்கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.