தந்தை பெரியாரின் 51வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (24.12.2024)கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன், மேயர் ரங்கநாயகி, கோட்டை அப்பாஸ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.