கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரயில்
சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து பிப்ரவரி 22ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் 23ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரயில் கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
