கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனம் (கே.ஐ.டி), அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப தீர்வு நிறுவனமான கிளவுட் டெஸ்டினேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம் கே.ஐ.டி துணைத் தலைவர் இந்து முருகேசன் மற்றும் கிளவுட் டெஸ்டினேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவ தர்மராஜ் ஆகியோருக்கிடையில், நிறுவனத்தின் முதல்வர் ரமேஷ், பிசினஸ் வென்சுரஸ் இயக்குநர் வாசிம் பெரோஸ், ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் அண்ட் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் டீன் விமல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஒப்பந்தம் குறித்து சிவ தர்மராஜ் கூறியதாவது: இது கல்வி மற்றும் தொழில்துறை இடையிலான இடைவெளியை குறைக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் உலகத் தரநிலைகளுடன் மாணவர்களை இணைப்பதன் மூலம், அவர்கள் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறக்கத் தயாராக இருப்பார்கள் எனக் கூறினார்.