கோவை, கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி துவக்க விழா திங்கட்கிழமை (14.10.2024) நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related posts
