சமூக நலத்திற்காகத் தன்னலமின்றி பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் சார்பாக மனிதநேயம் விருது – 2025 வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தரும், காந்தியவாதியுமான மார்கண்டன் பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.

பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவில் வாழ்த்துரை வழங்கினார். மகாத்மா காந்தி நினைவக அறங்காவலர் ஜி.டி. ராஜ்குமார், ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி. கோபால் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மனிதநேயம் விருது சமூக சேவையாளர்கள் யோகநாதன், மகேந்திரன், ராஜ சேது முரளி, லோகநாதன், வைரமணி, தஸ்லீமா நஸ்ரின், கணேஷ் சோமசுந்தரம், உதிரம் கோபி, ஜெயப்ரபா, வள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சமூக நலப் பணியில் ஈடுபடும் பலருக்கும் ஊக்கமாக அமைந்தது.