கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் ஓவியக் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. 2003ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 227 ஓவியக் கண்காட்சிகளைப் பலவித தலைப்புகளில் நடத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஓவியக் கண்காட்சிகளை ரிதமிக் பேலட் தொடர் 2024-2025 என்ற தலைப்பில் நடத்த முடிவு செய்துள்ளது.

இத்தொடரின் 17வது மற்றும் 228வது கலைக் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மனோகர் குத்துவிளக்கு ஏற்றி கலைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

5 4

கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கதிர் கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் கதிர், கௌரவ விருந்தினராக ‘கனவு’ தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஆகியோர் பங்கேற்றனர். கல்கி வார இதழின் முன்னாள் தலைமைத் துணை ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சென்னையைச் சேர்ந்த கோடு கலைக்கூடத்தின் ஓவியர்கள் சீராளன் ஜெயந்தன், மாதவ் மோகன்,  மாணவன் தாயுமானவன்,  தியாகராஜன்,  மெய்யப்பன்,  வசந்தன், லின்சி ஜோசி மற்றும்  சிவபாலன் செல்வராஜ் ஆகியோர் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர்.

1 18 6 2

ஆகஸ்ட் மாதம் 20 முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் ஓவியங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன.