கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில்
கல்லீரல் மற்றும் குடல் நோய்கள் குறித்த “கேஸ்ட்ரோ ஹெப்கான்” மருத்துவ கருத்தரங்கு,
சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி பேசுகையில்: குடல் நோய், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறைகளில் தொடர் கற்றலுக்கும், மருத்துவச் சிறப்பிற்கும் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இந்த கருத்தரங்கே சான்று.

உலகின் முன்னணி மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம், அறிவைப் பகிர்வதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு அதிநவீன மற்றும் நோயாளி நலன் சார்ந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில்: மருத்துவமனையின் வெற்றிக்குக் கூட்டுமுயற்சியும் புதிய கண்டுபிடிப்புகளுமே காரணம். கேஸ்ட்ரோ ஹெப்கான் போன்ற நிகழ்வுகள் மூலம் எங்களது மருத்துவக் குழுவினர் புதிய மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது, இது நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உதவுகிறது என்று கூறினார்.

முதன்மை விருந்தினராகப் பத்மபூஷன் பேராசிரியர் பழனிசாமி கலந்துகொண்டார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் டேரியஸ் மிர்சா, சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் சியோங் சீ கியோங், இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் முகமது தௌஃபிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த முன்னணி மருத்துவ வல்லுநர்கள், இத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினர்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், இங்கு நடைபெற்ற உரைகளும் விவாதங்களும் மிகச் சிறப்பாக இருந்ததாகவும், இது அவர்களின் அன்றாட மருத்துவப் பயிற்சிக்குப் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தனர். கருத்தரங்கில் 250கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.