கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.20 கோடி மதிப்பிலான லிப்ட் வசதியை, தைப்பூச திருநாளை முன்னிட்டு பக்தர்களுக்காக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த லிப்ட் வசதி ஒரே நேரத்தில், 40 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலில், வாகன நிறுத்துமிடத்திலிருந்து சுமார் 14 மீட்டர் உயரத்திற்கு பக்தர்கள் ஒரு லிப்டில் பயணம் செய்வார்கள். பின்னர், சுமார் 35 மீட்டர் நீளமான நடைபாதையில் நடந்து சென்று, இரண்டாவது லிப்டில் ஏறுவார்கள். இந்த லிப்ட் மேலும் சுமார் 8 மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.

இந்த இரண்டு லிப்டுகளின் மூலம், தொடக்க இடத்திலிருந்து சுமார் 22 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோவில் தளத்திற்குப் பக்தர்கள் சென்று சேர முடியும். ஒவ்வொரு லிப்டிலும் அதிகபட்சமாக 20 பேர் வரை பயணம் செய்யலாம். ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாகவும், கர்ப்பிணிகளுக்கு சலுகையுடன் வழங்கப்பட உள்ளது.