சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “திறமையான தொடர்பின் மூலம் தலைமையாண்மை” என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரை நடைபெற்றது. விரிவுரையை கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் விஷ்ணு பிரியன் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தனர். தாளாளர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
