தமிழகத்தின் அரசு துறைகள் தம்பிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில் பல்வேறு குறைகள் உள்ளது. திமுக ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம், பத்திர பதிவு கட்டணம், விலைவாசி அதிகரித்துள்ளதுடன் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

காவல் நிலையங்களில் புகார் அளிக்க செல்பவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளது.

முதலமைச்சரையும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினையும் சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தற்பொழுது தமிழகத்தில் நடக்கிறது. ஒரு தம்பி டாஸ்மாக்கை பார்த்துக்கொள்வதாகவும், இன்னொரு தம்பி மணல் கொள்ளையை பார்த்துக் கொள்வதாகவும், கனிமவளத்துறை, பத்திர பதிவுத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் தம்பிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திமுகவின் ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்காக தான், தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரம்மாண்ட யாத்திரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேட்டுப்பாளையத்தில் துவங்கி தமிழக முழுவதும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள், மற்ற அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம் மாநிலங்களை விட மிக மோசமான நிலையில் உள்ளதாகப் பேசினார்.