கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி – குனியமுத்தூர் பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிகாட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

போத்தனூர், ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.