பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் நந்தினி மாணவர் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி முதல்வர் ஆரதி, பேராசிரியர்கள், மாணவிகள் இதில் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சங்கீத் பல்வந்த் வாகே சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும் உடல் தகுதி, மன உறுதி மற்றும் அறிவுசார் கூர்மை பற்றி அவர் எடுத்துரைத்தார்.

கோயம்புத்தூர் கேப்ஜெமினி மூத்த இயக்குநர் மற்றும் மையத் தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் மாற்றம் மற்றும் புதுமைகளை இயக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தினார்.