பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி விடுதி வார்டன்களுக்காக ஒரு நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. விடுதி நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவதோடு மாணவிகளுக்கான ஆதரவான, ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குவதே பயிற்சியின் நோக்கமாகும்.
பயிற்சியில் மரியாதையான எல்லைகளை வகுத்தல், பெற்றோர், வருகையாளர்கள் மற்றும் புறத்துறை தொடர்புகளை திறம்பட கையாளுதல், விருந்தோம்பலையும் மாணவர் ஒழுக்கத்தையும் சமநிலைப்படுத்துதல், மனநலம் விழிப்புணர்வு, மாணவிகள் நலன்கள் ஆகியவை குறித்து கூறப்பட்டது.
பண்பாட்டு உணர்வு, இணைந்த விடுதி சூழல் உருவாக்கம், கலாச்சார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் மற்றும் வழக்குக் கற்றல்கள் இடம்பெற்றன. இந்த அமர்வுகளை தொழில்முறை பயிற்சியாளர்கள் சரவண பெருமாள், மதுமிதா வழிநடத்தினர்.
கல்லூரி முதல்வர் ஹாரதி, ஹாஸ்டல்ஸ் ஏ.ஜி.எம் லதா ஆகியோர், விடுதி வார்டன்கள் தேவையான திறன்களைப் பெற்று மாணவிகள் நலனில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினர்.
