கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பினர் மற்றும் இயந்திர பொறியியல் துறையினர் இணைந்து உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேம்பாடு பிரிவில் பெறப்பட்ட ₹1 லட்சம் மானியத் தொகையைக் கொண்டு காடுவெட்டிபாளையம் கிராமத்தில் நவீன நீர்ப்பாசன அமைப்பை செயல்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் நீர் பயன்பாட்டைக் கண்காணித்து, கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கிராமத்தில் உள்ள நீர்ப்பாசன சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியுமென கேபிஆர் கல்லூரியின் முதல்வர் சரவணன் கூறினார்