கோவை கொங்கு நண்பர்கள் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுகிழமை (21.09.2024) இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைப்பெற்றது.
நிகழ்வில் கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் நந்தகுமார் வரவேற்புரை வழங்கினார்.
சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமையுரையும், இணைச் செயலாளர் லோகநாதன் விழா அறிமுக உரையும் வழங்கினர்.
தொடர்ந்து, சங்கத்தின் கௌரவத் தலைவர்களான தமிழ்நாடு காவல் துறை தலைவர் (ஓய்வு ) பாரி,
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன்,
இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் செயலர் சரஸ்வதி கண்ணையன், திருப்பூர் டாலர் குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு நினைவுபரிசு வழங்கி வாழ்த்துரை அளித்தனர்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிக்கு பரிசு ஊக்கத் தொகையுடன் சங்கத்தின் துணைத் தலைவர் கண்ணன் இரண்டு சென்ட் நிலத்தினை இலவசமாக வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட 2023-2024 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.
சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.