கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு கம்பன் விழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்விற்கு சென்னை கம்பன் கழகத்தின் செயலர் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் “இருளும் ஒளியும்” என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை வழங்கினார். விழா மலரை புதுவை கம்பன் கழக செயலர் சிவக்கொழுந்து வெளியிட, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பல இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.