கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஆய்வுக் கட்டுரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

பிரணவ் ஆய்விதழ் நிறுவனத் தலைவர், ஆருத்ரா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சீதாலட்சுமி சுப்ரமணியன் சிறப்புரையில், ஆய்வுக் கருத்தை உருவாக்கும் முறைகள், ஆய்வுத் தரநிலைகள் மற்றும் ஒழுக்க நெறிகள், ஆய்வுக் கட்டுரையை அறிவியல் முறையில் எழுதுவதும் பதிப்பகங்களில் வெளியிடுவதும் குறித்து விளக்கினார். தொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், பிரணவ் ஆய்விதழும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுமங்கலா, ஐஐசி ஒருங்கிணைப்பாளர் திவ்யப்பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, பத்மாவதி, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
