கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா நடைபெற்றது. கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் சி.ஏ.வாசுகி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வா் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சென்னை, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான டாக்டர் சுதா சேஷய்யன் பங்கேற்று பேசுகையில்: மாணவ – மாணவியா் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். கடமையிலிருந்து பின்வாங்காமல் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஒருவா் நலமுடன் இருப்பது என்பது உடல், மனம், சமுதாயம், ஆன்மீகம் ஆகிய நான்கிலும் நலமுடன் இருப்பதையே குறிக்கும். நேரமேலாண்மை மனஅழுத்தத்தைக் குறைக்கும் என்றார்.
ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியா்களுக்குச் சிறப்பு விருந்தினா், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் நூல்கள், ஆய்விதழ்களில் கட்டுரைகளை எழுதிய பேராசிரியா்களுக்குச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகைகைளையும் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் சி.ஏ. வாசுகி வழங்கினார்.

