உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டுகே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக ரேஸ்கோர்ஸில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் உணவு முறைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இலவசமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் உடல்நலப் பரிசோதனைகள் செய்தனர். தொடர்ந்து சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு முறைகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

jkcmkj

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் நீரிழிவுத் துறை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சிவஞானம், டாக்டர் சங்கர் தண்டபாணி, டாக்டர் வித்யா மற்றும் டாக்டர் துரைராஜ் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு முகாம் மற்றும் உணவு கண்காட்சியினை துவக்கி வைத்தனர்.