கே.ஐ.டி கல்லூரி, போர்டினேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சைபர் செக்யூரிட்டி துறையில் வளர்ந்து வரும் நவீன கால பாதுகாப்பு முறைகள், பல்வேறு துறைகளின் சைபர் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய நேரடியான வழிகாட்டுதல்களையும், அது தொடர்பான வேலைவாய்ப்பினை மாணவர்கள் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
தலைமைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் டீன் மஹாலக்ஷ்மி, கணினித்துறை டீன் விமல், போர்டினேட் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய திட்ட மேலாளர் குசலா காடே, கெரியர் டிஐக்யூ நிறுவனத்தின் கஸ்டமர் பிரிவின் பொது மேலாளர் பிரின்ஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
