கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
துணைத் தலைவர் இந்து முருகேசன் பேசுகையில்: கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக நமது கல்லூரி 100% சேர்க்கை சாதனையை தொடர்ந்து பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ஹாக்கத்தான் போன்ற புதுமை நிகழ்வுகளில் அதிக அளவில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக கூறினார்.
முதன்மை விருந்தினராக நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் ஒழுக்கம் குறித்து வலியுறுத்தினார். நமது கல்லூரியில் சிறந்த வேலைவாய்ப்புகளை மாணவர்கள் தொடர்ந்து பெற்று வருவதையும் மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மேற்கொள்ளும் சிறந்த ஆராய்ச்சி பணிகளையும் பாராட்டினார்.
கல்லூரியில் 10 ஆண்டுகள் முழுமையாக சேவை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து, கல்வி, விளையாட்டு, பண்பாட்டு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
